கந்தானை இரசாயன தொழிற்சாலையில் தீவிபத்து : ஒருவர் பலி!

#SriLanka #Accident #Lanka4 #fire
Thamilini
2 years ago
கந்தானை இரசாயன தொழிற்சாலையில் தீவிபத்து : ஒருவர் பலி!

கந்தானை பிரதேசத்தில் இரசாயன உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று (08.08) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 தீ விபத்தின் போது, ​​நிறுவனத்தின் கணக்காளர் களஞ்சியசாலைக்குள் இருந்ததால், அவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

கம்பஹா மற்றும் நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினரும், கடற்படையின் தீயணைப்பு பிரிவினரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4