விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் வேளாண்மையின் அறுவடை விழா

#SriLanka #Ampara #Event #Lanka4
Kanimoli
2 years ago
விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் வேளாண்மையின் அறுவடை விழா

அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் கல்லூரி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையின் அறுவடை விழா கல்லூரியின் பதில் அதிபர் எம்.எம்.ஹசனின் தலைமையில், கல்லூரியின் பதிவாளர் எம்.ஏ.சி.எம்.றகீப்பின் பிரசன்னத்துடன் இன்று (8) வெகு விமர்சையாக நடைபெற்றது.

images/content-image/1691482944.jpg

 இவ்விழாவில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.எம்.சித்தி பாத்திமா அவர்கள் கலந்து கொண்டு நெல் அறுவடையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

images/content-image/1691482962.jpg

 இந் நிகழ்வில் கல்லூரியின் வர்த்தக் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.எம்.றாபி, தகவல், தொழில் நுட்ப போதனாசிரியர் எம்.பி.எம்.சிராஜ், விவசாய கற்கை நெறியின் புறப்போதனாசிரியர் எம்.ஐ.எம்.நசீர், விவசாயத் திணைக்களத்தின் ஓய்வு நிலை கிழக்கு மாகாணப் பணிப்பாளரும், 

images/content-image/1691482975.jpg

கல்லூரியின் முன்னாள் விவசாய கற்கை நெறியின் புறப்போதனாசிரியருமான வை.பி .இக்பால் போன்றோரும் கலந்து கொண்டு நெல் அறுவடையை மேற் கொண்டதுடன், விவசாய கற்கை நெறியின் விடுகை மாணவ, மாணவிகளும், புதிய மாணவ,மாணவிகளும், கைதேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டு அறுவடையை மேற் கொண்டதுடன், மாணவர்களால் விவசாயப் பாட நெறி தொடர்பாக விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4