டெல்லி விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

#India #Airport #Delhi #Tamilnews #Gold
Mani
2 years ago
டெல்லி விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில், துபாயில் இருந்து இந்தியா வந்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தல்காரர் தங்கத்தை உருக்கி பேஸ்டாக மாற்றி கடத்தி வந்துள்ளார். இதையடுத்து, 1,893 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், அதன் மதிப்பு ரூ. 99.53 லட்சம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடத்தல்காரரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்துக்கு பயணி ஒருவர் சட்டவிரோதமாக 1.52 கிலோ கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4