ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா மிக சிறப்பாக நடைபெற்றது

#India #Temple #ஆன்மீகம் #கோவில் #ஆலயம் #Tamilnews
Mani
2 years ago
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா மிக சிறப்பாக நடைபெற்றது

ஆற்காடு மாவட்டம் ராணிப்பேட்டை ரத்னகிரி வள்ளி அருகே அமைந்துள்ள தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில் ஆடிப் பரணி மற்றும் ஆடி கிருத்திகை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி திருவிழா நடந்தது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, பால், விபூதி, சந்தனம், தயிர், குங்குமம், தேன், பனீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பழங்கள், தங்க ஆபரணங்கள், வைரவேல் மற்றும் சேவல் கொடியுடன் கூடிய சிறப்பு அலங்காரங்களும் இடம்பெற்றன. கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் வழிபாடுகளை நடத்தினார். மேலும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டும், வேல் குத்திக்கொண்டும் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். தங்க ரதத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சண்முக புஷ்கரணி தடாக்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கர்கப்பட்டு இருந்தது. வேலூர் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4