மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கண் திறந்த அற்புதம்!

#spiritual #Eye #Lanka4 #ஆன்மீகம் #கடவுள் #goddess #லங்கா4
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கண் திறந்த அற்புதம்!

இந்தவருடமும் வெளிநாட்டு பக்தர்களின் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பங்கள் சார்பாக நிறைகுட சுயம்பிற்கானஆடிப்பூரப்பூர பால் அபிசேகத்தில் சுயம்புவடிவான அன்னை கண்பார்த்த சித்தாடல் இடம்பெற்றது! 

கடைசிப்படத்தை உற்றுநோக்கினால் இது தெள்ளத்தெளிவாகத் தெரியும் . நாம் நமக்கு கிடைத்தவாய்ப்பை சரியாகப்பயன்படுத்தி அன்னையின் அருளைப்பெறுவோமாக..! அதை சிறப்பாக செய்துதந்த அம்மாவின் இளையகுமாரர் சக்திமிகு கோ.ப.செந்தில்குமார் (மருவூர் சின்னவர் ) அவர்களுக்கும் மற்றும் அதை செயல்முறைப்படுத்திய ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தமிழ்நாடு பொறுப்பாளர் சக்தி திரு . கபிலன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

 பால் வார்த்த குடும்பங்களுக்கு பராசக்தியின் பேரருள் கிடைத்தது போல் அன்னை கண்திறந்து ஏற்றுள்ளாள் . எங்கேயோ பிறந்து வளர்ந்த யார்யாரோ கருவறையில் அபிடேகம் செய்யும்போது பக்தி சிரத்தையோடு கும்பிடும் நாம் , அம்மாவின் உதிரத்தில் பிறந்தவர்கள் திருக்குடும்பத்தில் யார் செய்தாலும் ஏற்று அருள் செய்வாள் என்பது பேருண்மை அன்றோ..! அடிகளார் அம்மா ஒன்றே நடமாடும் தெய்வம்

 ஓம் சக்தி ! ஆதிபராசக்தி!

 தெய்வத்திடம் நம்பிக்கை வை

 அடிகளாரையோ அவர் குடும்பத்தையோ ஆராட்சிசெய்யும் வேலை நமதன்று! அதையே அம்மா குருவை நம்பு, குருவே தெய்வம் ,குருவை ஆராட்சி செய்யாதே என்கிறாள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4