சார்லஸின் முடிசூட்டு விழாவை நினைவுகூர்ந்து சிறப்பு நாணயம் வெளியீடு

#India #UnitedKingdom #world_news #England
Mani
2 years ago
சார்லஸின் முடிசூட்டு விழாவை நினைவுகூர்ந்து சிறப்பு நாணயம் வெளியீடு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அதனை தொடர்ந்து அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக அரியனை ஏறினார். அவர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6-ந் தேதி லண்டனில் கோலாகலமாக நடந்தது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை நினைவுகூரும் வகையில், தனித்துவம் வாய்ந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை, இங்கிலாந்து நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் 'தி ராயல் மின்ட்' நிறுவனம் நேற்று வெளியிட்டது. 

இந்த நாணயம் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என்று 'தி ராயல் மின்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4