மிக சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா செய்வது எப்படி?
#India
#Recipe
#Cooking
#Food
#2023
#Tamilnews
#How_to_make
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
- 1கப் பாஸ்தா
- 2 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் உப்பு
- 4 டீஸ்பூன் எண்ணெய்
- 1 பற்கள் பூண்டு
- 3 ஸ்பூன் குடைமிளகாய்
- 3 ஸ்பூன் கேரட்
- 3 ஸ்பூன் சோளம்
- 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
- 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
- 11 /2 கப் பால்
- 1 மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகு
- உப்பு தேவையானஅளவு
செய்முறை:
- முதலில் பாஸ்தாவை தண்ணீரில் போட்டு 7 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து வதக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பொடியாக நறுக்கி 5 நிமிடங்கள் வதிக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
- மீண்டும் கடாய் வைத்து வெண்ணெய் விட்டு உருகியதும் மைதா மாவு சேர்த்து. நன்கு வதக்கிக்கொண்டே இருங்கள். மாவு வெண்ணையுடன் நன்கு கலக்க வேண்டும்.
- பின் பால் ஊற்றி வதக்கவும். நன்கு கெட்டியான சாஸ் பதம் வரும் வரை வதிக்கிக்கொண்டே இருக்கவும்.
- பின் அதில் காய்ந்த மிளகாய், மிளகு, உப்பு சிறிதளவு சேர்த்து கலக்குங்கள். பின் வதக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து வதக்குங்கள்.
- அடுத்ததாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து பிரட்டுங்கள். சாஸ் இறுகி, மசாலா சேர்ந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.