கனடாவில் தற்கொலை செய்துகொண்ட யாழ் இளைஞன்

#Jaffna #Death #Canada #Suicide
Prasu
2 years ago
கனடாவில் தற்கொலை செய்துகொண்ட யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து வசித்து வந்த தமிழ்இளைஞன் ஒருவர் நேற்று தொடர்மாடி வீடொன்றில் 16 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியை சொந்த இடமாக கொண்ட 31 வயதான ரகுபதி ஆனந்த் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

யாழ் வடமராச்சியில் வசித்து வந்த இவர், கனடாவில் மேம்பில் பிரதேசத்தில் பெண்ணொருவடன் தொடர்மாடி வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பெண்ணையும் மாடியில் இருந்து தள்ளி விட்டு, அவரும் மாடியில் இருந்து குதித்து தற்காலை செய்ய முயற்சித்துள்ளார்.

தள்ளிவிடப்பட்ட பெண் மேல் மாடியில் பல்கனியில் உள்ள வேலியில் சிக்கிக்கொண்டுள்ளதுடன் இளைஞன் மாத்திரம் கீழே விழுந்துள்ளார்.

 கீழே குதித்த இளைஞனின் உடல் முற்றத்தில் கிடந்த நிலையில், கனேடிய பொலிஸாரால் மீட்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4