அசோகா அல்வா ஈஸியாக வீட்டிலே இப்படி செய்து பாருங்க!
#India
#Cooking
#Food
#2023
#Tamilnews
#Sweets
#How_to_make
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
- 100 கிராம் பாசிப்பருப்பு
- 200 கிராம் சீனி
- 2 மேஜைக்கரண்டி கோதுமை மாவு
- 50 கிராம் நெய்
- 10 முந்திரிப் பருப்பு
- கேசரி கலர் சிறிது
செய்முறை:
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பருப்பு நன்றாக வெந்ததும் நன்கு மசித்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன் கோதுமை மாவை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, பாதி அளவு நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
- அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது சீனி, கேசரி பவுடர் பவுடர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
- சீனி நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும்.பிறகு மீதமுள்ள நெய், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான அசோகா அல்வா ரெடி.