கிராமத்து கோவைக்காய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

#India #Tamil People #Recipe #Cooking #Food #Tamilnews #How_to_make
Mani
8 months ago
கிராமத்து கோவைக்காய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

தேவையான பொருட்கள்:

  • 100 gm கோவைக்காய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 புளி நெல்லிக்காய் அளவு
  • 10 கறிவேப்பிலை
  • 1 tbsp எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை:

  • கோவைக்காய் செய்ய முதலில் கோவைக் காயை வில்லை வில்லைகளாக நறுக்கவும். தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
  • பின்னர் அதே வாணலியில் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி ஜாரில் போட்டதும், நறுக்கிய கோவைக்காயைப் போட்டு வதக்கி ஜாரில் போடவும்.
  • பின்னர் மிக்சி ஜாரில் புளி, உப்பு, சிறிது கறிவேப்பிலை போட்டு அரைக்கவும்.
  • பொதுவாக தண்ணீர் விட வேண்டாம், கோவைக்காயில் உள்ள நீரே சட்னிக்கு சரியாக இருக்கும்.நன்கு அரைந்ததும் எடுத்தப் பரிமாறலாம்