உலக தடகள சாம்பியன்ஷிப் 2023: நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்

#India #world_news #WorldCup #sports #2023 #Tamilnews #Player #Sports News
Mani
2 years ago
உலக தடகள சாம்பியன்ஷிப் 2023: நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்

ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 20 மேற்பட்ட இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிககான தகுதி சுற்றில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் வீசி, முதல் வீரராக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கடந்த முறை ஓரகனில் இதே தொடரில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் இன்று மீண்டும் நடப்பாண்டு இறுதிப் போட்டிக்கு இந்த தொடரின் சிறந்த இலக்கை எட்டி முன்னேறி உள்ளார் சோப்ரா. நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று இந்த முறை தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4