ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை செய்யும் முறை
#India
#Recipe
#Cooking
#Food
#How_to_make
#Tamil Food
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
- 300 கிராம் பனீர்
- 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
- 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
- உப்பு தேவைக்கு
- 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 பெரிய வெங்காயம் நறுக்கவும்
- 1 தக்காளி நறுக்கவும்
- மல்லித்தழை சிறிது
செய்முறை:
- பனீரைசிறிய சதுர துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடங்கள் வேகவிட்டு பனீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அப்பொழுது பனீர் மிருதுவாக இருக்கும்.
- தவாவில் 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பனீர் நன்கு பொன்னிறமாக வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
- அதேதவாவில் மீதியுள்ள நல்லெண்ணெயை விட்டு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும்.
- உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூளை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
- பின்பு பனீர் சேர்த்து கிளறவும். தண்ணீர் வற்றும்வரை கிளறி மல்லித்தழையை தூவி பரிமாறவும்.