உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியர் நீரஜ் சோப்ரா சாதனை

#India #sports #2023 #Tamilnews #Gold #Player #Breakingnews #Sports News
Mani
2 years ago
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியர் நீரஜ் சோப்ரா சாதனை

19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்தது. கடைசி நாளான நேற்றிரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது. இறுதிப் போட்டிக்கு வந்த 12 பேரில் 3 பேர் இந்தியர்கள் என்பதால், போட்டியை பார்வையாளர்கள் ஆவலுடன் உற்றுநோக்கினர்.

எதிர்பார்த்தபடி, இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் தடம் பதித்தார். அவருக்கு கடும் சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார். மற்ற இந்தியர்களான கிஷோர் குமார் (84.77 மீட்டர்), டி.பி.மனு (84.14 மீ) முறையே 5 மற்றும் 6-வது இடங்களை பிடித்தனர்.

நீரஜ் சோப்ராவின் பதக்கம், உலக தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டு, நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், 2003ல் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார். சர்வதேச தடகளத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா என்ற 25 வயது இளைஞருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4