7 குதிரைகள் படத்தினை வீடுகளில் தொங்க விட்டால் என்ன நன்மை தெரியுமா?

#spiritual #Lanka4 #ஆன்மீகம் #picture #படம் #வீடு #லங்கா4 #vasthu #athisdam #veedu
Mugunthan Mugunthan
10 months ago
7 குதிரைகள் படத்தினை வீடுகளில் தொங்க விட்டால் என்ன நன்மை தெரியுமா?

வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதில் ஓவியங்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றன. 

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில ஓவியங்களை சரியான திசையில் வைக்கும்போது, அவை நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டு விளங்குவதாக உள்ளது. 

பழமையான வாஸ்து சாஸ்திரத்தில் குதிரைகள் அடங்கிய படங்கள், ஓவியங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.

 குதிரைகளில் முக்கியமாக பாய்ந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட படங்கள் வலிமை, வெற்றி, அமைதி மற்றும் முன்னேற்றத்தை குறிப்பதாக உள்ளது. எனவே, ஏழு குதிரைகள் கொண்ட ஓவியங்கள் (7 horses painting) அல்லது அதேபோன்ற படங்களை வீடு அல்லது அலுவலகத்தில் வைப்பது ஒருவர் வாழ்வில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.

 வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு அல்லது அலுவலகத்தில் 7 குதிரைகள் அடங்கிய ஓவியத்தை மாட்டுவதற்கு ஏற்ற சிறந்த இடமாக வீட்டின் தெற்கு நோக்கிய சுவர் உள்ளது.

 வாஸ்து சாஸ்திரத்தில் புனிதமாக கருதக் கூடிய விலங்குகளில் குதிரைகளும் ஒன்று. அவை உறுதி, தைரியம், சக்தி, வலிமை மற்றும் நேர்மையை குறிப்பதாக உள்ளது.

 ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வீட்டில் மாட்டி வைப்பதன் மூலம் ஒரு வாழ்வில் நேர்மறை ஆற்றகள் பல விதங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. 

பாய்ந்து ஓடும் குதிரைகளின் படம் வேகம் மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான குறிப்பாக உள்ளது. மேலும், ஏழு என்ற எண் அனுகூலமான எண்ணாக கருதப்படுகிறது. எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வீட்டில் சரியான திசையில் மாட்டி வைப்பதன் மூலம் ஒருவரது முயற்சியை ஊக்குவிக்கவும், அதற்கான சாதகமான பலன்களை கிடைக்கவும் இது பெரிதும் துணை புரிகிறது.