சீனாவுக்காக உளவு பார்த்த ஒருவர் பிரித்தானியாவில் கைது!

#Arrest #world_news #Lanka4 #sri lanka tamil news #England
Thamilini
2 years ago
சீனாவுக்காக உளவு பார்த்த ஒருவர் பிரித்தானியாவில் கைது!

உளவுப் பார்த்த குற்றச்சாட்டில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பணிப்புரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த நபர் நேற்று (08.09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிய அவர், சீனாவுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

20 வயதுடைய குறித்த நபருக்கு  ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4