'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

#India #Cinema #Actor #TamilCinema #Director #release #2023 #trailer #Tamilnews #Movie
Mani
2 years ago
'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

நடிகர் சிவா நடித்த ‘தமிழ்படம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து, இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' திரைப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த தகவல் விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4