‘மின்மினி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை படக்குழு வெளியிட்டுள்ளது

#2023 #Tamilnews #Movie
Mani
2 years ago
‘மின்மினி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை படக்குழு வெளியிட்டுள்ளது

ஹலிதா ஷமீம் இயக்கும் ‘மின்மினி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் ஆந்தாலஜி தொகுப்பான‘புத்தம் புது காலை விடியாதா’வின் லோனர்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது ‘மின்மினி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை அதாவது 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘மின்மினி’ படத்தில் எஸ்தர் அனில் (பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘இது தனது கனவுத்திரைப்படம்’ என ஹலிதா ஷமீம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். ‘மின்மினி’ படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ‘அங்கர் பாய் ஸ்டூடியோஸ்’ (Anchor Bay Studios) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழும் இருவரின் காதலைப் பற்றி படம் பேசுவதை தோற்றம் உறுதி செய்கிறது. கதை வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்வதையும், காதலர்களுக்கிடையிலான கண்ணீரையும் இந்த முதல் தோற்றம் வெளிப்படுத்துகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4