கியூபாவிற்கும் - இலங்கைக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன - ரணில்!
கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜி 77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு ஜனாதிபதி மிகுவல் டைஸ் கெனாலைச் சந்தித்த பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, "கியூபா ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் கியூபா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் ஒப்பந்தத்தை எட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகளின் தீர்மானங்களில் கியூபாவை நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் மனித உரிமைகள் தீர்மானங்களுக்கு கியூபா ஆதரவளிக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.