கனடாவில் மாணவரொருவர் தாக்கப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்

#Student #Canada #Attack #Lanka4 #தாக்குதல் #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடாவில் மாணவரொருவர் தாக்கப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 17 வயது சீக்கிய மாணவர் தாக்கப்பட்டுள்ளமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 17 வயது சீக்கிய மாணவர் , ரட்லேண்ட சாலை தெற்கு-ராப்பூர் சாலை கிழக்கு சந்திப்பில், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது இரண்டு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 பஸ்சில் தகராறு இந்த தாக்குதலுக்கு முன்பு பஸ்சில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் பஸ்சில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும்  பொலீசார் தெரிவித்தனர்.

 இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து இந்திய துணை தூதரகம் கூறுகையில், "சீக்கிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4