ஹரக் கட்டாவிற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் உறவினர் ஒருவரும் கைது

#SriLanka #Police #Investigation
Prathees
1 year ago
ஹரக் கட்டாவிற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் உறவினர் ஒருவரும் கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் உறவினர் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது சந்தேக நபரான ஹரக் கட்டா, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைத் திருட முயற்சித்துள்ளார்.

 சந்தேக நபரிடம் விசாரணை நடத்தும் போது, ​​ஹரக் கட்டாவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கியை திருட முயற்சித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 அப்போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஹரக் கட்டா எனப்படும் சந்தேகநபரான நடுன் சிந்தக விக்கிரமரத்னவை மலசலகூடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் முனிபாலகே ரவிந்து சந்தீப முனசேகர என்பவரும் இந்த சம்பவத்தின் பின்னர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் தலைமையில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட விசேட புலனாய்வுக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 இதேவேளை, காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 அத்தகைய தகவல்களை 071 85 91 774 அல்லது 071 85 94 929 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!