80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாழும் ஜப்பானில் சிறுவர்கள் மன உளைச்சலுக்குள்ளாக்கப் படுகிறார்கள்

#world_news #Development #Elder #Lanka4 #Japan #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாழும் ஜப்பானில் சிறுவர்கள் மன உளைச்சலுக்குள்ளாக்கப் படுகிறார்கள்

80 வயதுக்கு மேல் அதிகமானவர்கள் வாழும் ஜப்பானில் சிறுவர்கள் மன உழைச்சலுக்கு உள்ளாகப்படுகிறார்கள். உலகில் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம், சுறுசுறுப்பு மிக்க மக்கள் வாழும் நாடென்றால் ஒரு சிறு வயது சிறுவன் கூட கூறுவான் ஜப்பான் என்பதை. 

 உடற்பயற்சி, மன பயிற்சியிலும் இவர்கள் உலகில் முதலிடமே. ஒவ்வொரு தொழிற்ச்சாலையிலும் காலையில் உடற்பயிற்சி செய்ததன் பின்னரே பணிகள் ஆரம்பிக்கின்றார்கள்.

 அந்த வகையில் உலகிலேயே அதிகளவிலான முதியோர் எண்ணிக்கைளை கொண்ட நாடு ஜப்பான். ஜப்பானின் மக்கள்தொகையில் 65 அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் வீதம் கடந்த ஒரு வருடத்திற்குள் 29 சதவீதத்திலிருந்து 29.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 நிலையற்ற வேலைகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஜப்பானிய இளைஞர்கள் பல காலங்களாக திருமணம் மற்றும் குழந்தை பெறுவதை தாமதமாக்கின்றனர்.

 இதன் காரணமாகவே ஜப்பானின் மக்கள் தொகை சுருங்கி விட்டது. இதன் விளைவாக தற்போது வேலை வாய்ப்புக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கும், பல்வேறு சமூக மற்றும் நலத் திட்டங்களுக்கு பணம் செலுத்துவதற்கும் போதுமான இளைஞர்கள் இல்லாத நிலையில் முதியோர் பராமரிப்புக்கான செலவுகள் அதிகரித்துள்ளது.

 ஜப்பான் மக்கள் தொகையில் 12.59 மில்லியன் மக்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், 20 மில்லியன் மக்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்களும் ஆவர். அதன் காரணமாக ஜப்பான் வயதான தொழிலாளர்களை நம்பியுள்ளது. 

2040 ஆம் ஆண்டில், ஜப்பானின் முதியோர் மக்கள் தொகையில் 34.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களை பார்த்து நாமும் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. 

 இருந்தும் பிள்ளைகள் கல்வி ரீதியாக மன உழைச்சலுக்கி லக்காகி தற்கொலை செய்துகொள்ளும் நாடும் இதுவென பல ஆய்வுகள் கூறுகின்றன.