மற்றொரு வெள்ளைக்கார பெண்ணுடன் நீதிமன்றம் சென்ற தனுஷ்க குணதிலக! தற்போதைய காதலியா?
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (18) மற்றுமொரு வெள்ளைப் பெண்ணுடன் டவுனிங் சென்டர் நீதிமன்றத்திற்கு தனது விசாரணையை எதிர்கொள்வதற்காக வந்ததாகவும், அந்தப் பெண் வாதி அல்ல எனவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண் தனுஷ்க குணதிலக்கவின் தற்போதைய காதலி என நம்பப்படுவதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா குற்றமற்றவர் என ஒப்புக்கொண்டதையடுத்து, ஜூரி இன்றி நேற்று (18) விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கு விசாரணை சுமார் 4 நாட்கள் நடைபெறும் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.