திலீபனின் நினைவேந்தலிற்கு கொழும்பில் தடை விதித்த நீதிமன்றம்!

#SriLanka #Sri Lanka President #Colombo #Court Order #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
9 months ago
திலீபனின் நினைவேந்தலிற்கு கொழும்பில் தடை விதித்த நீதிமன்றம்!

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை கொழும்பு நகரத்தில் பல பகுதிகளில் நடாத்த முடியாதவாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

 பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்குமுகமாக, இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இன்று (19) கொழும்பு கோட்டை, கொம்பனித்தீவு மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திலீபனின் நினைவேந்தலை பல அமைப்புக்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.