பாப்பரசருக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று சனிக்கிழமை காலை பரிசுத்த பாப்பரசரை மார்செய் நகரில் வைத்து சந்தித்தார்.
அதன்போது அவருக்கு இரண்டு புத்தகங்களை பரிசாக அளித்தார். Albert Camus எனும் எழுத்தாளர் எழுதிய L'été எனும் புத்தகமும், Félix Reynaud எழுதிய Ex-voto marins de Notre-Dame-de-la-Garde எனும் புத்தகத்தையும் ஜனாதிபதி பாப்பரசருக்கு பரிசளித்தார்.
இவற்றில் L'été எனும் புத்தகம் 1954 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும். வரலாற்றில் கிறிஸ்தவ மதம் எவ்வாறு பிரான்சில் பரவியது என்பதை குறிக்கும் மேற்படி புத்தகமாகும்.
Ex-voto marins de Notre-Dame-de-la-Garde புத்தகம் மேற்படி தேவாலயம் குறித்த புத்தகமாகும். இன்று சனிக்கிழமை காலை Pharo மாளிகையில் வைத்து பாப்பரசரைச் சந்தித்த ஜனாதிபதி மக்ரோன், அவரை கைகுலுக்கி வரவேற்றார். அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு,. அதன்பின்னர் புத்தகத்தினை பரிசளித்தார்.