IMF இன் இரண்டாவது கடனுதவிக்கான இறுதி கலந்துரையாடல் : ரணில் பங்கேற்பு!
#SriLanka
#Lanka4
#IMF
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 26ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடனுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதி கலந்துரையாடலாக ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெறும் விசேட கலந்துரையாடல் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
அந்த கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை இலங்கை பெறுவது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



