ஜெர்மன் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (25.09) இரவு அவர் ஜெர்மனிக்கு புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேர்லினின் குளோபல் உரையாடலில் பங்கேற்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் குளோபல் உரையாடல் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில்நடைபெற உள்ளது.



