கனடா பிரதமர் யூத மக்கள் தொடர்பில் மன்னிப்புக் கோரினார்

#PrimeMinister #Canada #Lanka4 #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடா பிரதமர் யூத மக்கள் தொடர்பில் மன்னிப்புக் கோரினார்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யூத மக்களின் நினைவுகளை மீறியமைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 22 ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்திருந்தார். அவருடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.

 இதனிடையே அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.

 இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த விவகாரம் கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

 இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன். அப்போதைய சூழலை அறியாமல் யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4