650 கோடி மதிப்புள்ள தடுப்பூசி மருந்துகளை அகற்ற நடவடிக்கை

#SriLanka #Vaccine
Prathees
1 year ago
650 கோடி மதிப்புள்ள தடுப்பூசி மருந்துகளை அகற்ற நடவடிக்கை

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் உத்தியோகபூர்வ முத்திரையைப் பயன்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அறுநூற்று ஐம்பது கோடி ரூபா (20 மில்லியன் டொலர்கள்) பெறுமதியான 22,500 இம்யூனோகுளோபுலின்(immunog lobulin) குப்பிகளை அகற்ற சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 கண்டி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய நான்கு வைத்தியசாலைகளின் இந்த ஆன்டிபாடி தடுப்பூசியைப் பயன்படுத்திய மருத்துவர்கள், தடுப்பூசியின் பாதகமான எதிர்விளைவுகள் குறித்து சுகாதார அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

 இந்த தடுப்பூசி குப்பிகளை இலங்கைக்கு கொண்டு வரும் போது சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரும் மருந்து கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளரின் உத்தியோகபூர்வ முத்திரையை பயன்படுத்தி ஏமாற்றி இலங்கைக்கு கையிருப்பு கொண்டு வந்துள்ளார்.

 இந்திய நிறுவனம் ஒன்றினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசி குப்பிகள் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பதிவு விலக்கின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 முறையான தரத்தை சரிபார்க்காமல் இவ்வாறான மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய பண விரயம் ஏற்படுவதாகவும் எனவே பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

 இதனை உடனடியாக விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தமது கூட்டணி முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!