இந்த நாட்டில் சமூகம் பாவம் நிறைந்ததாக மாறியுள்ளது: கொழும்பு பேராயர்
#SriLanka
#Colombo
#Malcolm Ranjith
Prathees
1 year ago

இந்நாட்டு மக்களை நீதிமான்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் மாற்ற மஞ்சள் அங்கி, வெள்ளை அங்கி உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மதங்களைப் பின்பற்றுவதாகக் கூறினாலும், அவை அனைத்தும் பொய்யாகி, இந்த நாட்டில் உள்ள சமூகம் பாவம் நிறைந்ததாக மாறியுள்ளது என்றும் கர்தினால் கூறினார்.
டொலர்கள் கிடைத்தால், நாட்டின் தலைவர்களும் எந்த ஊழல் செயலிலும் ஈடுபடத் தூண்டப்படுகிறார்கள் என்று கூறிய கர்தினால், இதுபோன்ற நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு மதத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



