மலேசியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றவாளிகளுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

மலேசியாவில் 03 இலங்கையர்களின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை தொடர்ந்தும் விளக்குமறியளில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் செப்டம்பர் 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
கொலைச் சம்பவம் தொடர்பாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட மூவரில் தம்பதியரின் மகனும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



