மீண்டும் ஒரு வழக்குக்கு தயாராகும் தனுஷ்க குணதிலக்க
#SriLanka
#Srilanka Cricket
Prathees
1 year ago

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அது தொடர்பான குற்றச்சாட்டின் மூலம் தனக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார்.
தனுஷ்க குணதிலக்கவின் வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் கலந்து கொண்ட சட்டத்தரணி கலாநிதி சானக சேனாநாயக்க நட்டஈடு கோரி அவுஸ்திரேலியா சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யத் தயார் எனத் தெரிவித்தார்.



