ஸ்பெயினின் முர்சியா நகரிலுள்ள பிரபல விடுதியில் தீவிபத்து : 07 பேர் பலி!
#SriLanka
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Spain
Dhushanthini K
1 year ago

ஸ்பெயினின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது அங்கு ஏராளமானோர் இருந்ததாகவும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தீ விபத்தின் பின்னர் ஏற்பட்ட புகை மூட்டத்தால் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.



