ஸ்பெயினில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து

#Accident #world_news #fire #Spain
Prathees
1 year ago
ஸ்பெயினில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து

ஸ்பெயினின் தென்கிழக்கில் உள்ள முர்சியா நகரில் உள்ள பிரபல இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

 உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 தீ விபத்தின் போது அங்கு ஏராளமானோர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 தீ விபத்தின் பின்னர் புகை மூட்டத்தால் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

 தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!