பாதசாரி கடவையில் முச்சக்கர வண்டி மோதியதில் கர்ப்பிணி தாதி படுகாயம்
புத்தளம் பகுதியில் இன்று மாலை பாதசாரிகள் கடவையில் முச்சக்கர வண்டி மோதியதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தாதியாக கடமையாற்றும் காயமடைந்த பெண், கடமைக்காக வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.
ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்படும் குறித்த தாதி, மாவனெல்ல பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், முதலில் ஆபத்தான நிலையில் புத்தளம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.