ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் காலநிலை மாற்றத்தைஅவசரநிலையாக இனம் கண்டுள்ளனர்

#Sri Lanka #Lanka4 #environment #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
1 month ago
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் காலநிலை மாற்றத்தைஅவசரநிலையாக இனம் கண்டுள்ளனர்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை ‘பூகோளத்தின் அவசரநிலையாக இனம் கண்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடரபில் மக்கள் பிரநிதிகளின் பங்களிப்பு போதியளவில் இல்லையென்று இளம் தலைமுறையினர் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 ஆசிய பசுபிக் பிராந்திய இளைஞர்கள் போரத்தின் அமைச்சர்கள் மற்றும் சூழலியல் அதிகாரிகளுக்கான 5 ஆவது போரம் நேற்று 30ஆம் திகதி ஐ.நா அலுவலக முன்றலில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

 அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் ஆசிய பசுபிக் பிராந்தியமானது அதன் சுற்றாடல் பிரச்சினைகளைக் கையாள இளைஞர்களின் பங்களிப்பை அவசியமாகவும் அவசரமாகவும் வேண்டி நிற்பதாவும் தெரிவித்த அவர் அந்த வகையில் இந்த போரம் ஒரு மைல் கல்லாக அமைவதாகவும தெரிவித்தார்

 நிலை பேராண்மை அற்ற உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பனவற்றால் ஏற்பட்டுள்ள சுற்றாடல், சமூக, மற்றும் பொருளாதார பிரச்சினை களை நாடுகள் எதிர்கொள்வதாகவும் அவற்றை தீர்க்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறத்தினார்

மேலும் மரண அறிவித்தல்களுக்கு