பாடசாலைகளுக்கு 150 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

#School #Arrest #America #Peru #intimidating
பாடசாலைகளுக்கு 150 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது


அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு 150க்கும் அதிகமான முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரு நாட்டை சேர்ந்த நுனெஸ் சேண்டோஸ் (33) என்ற இளைஞர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது, குழந்தைகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பது என்று அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 15ம் திகதி முதல் 21ம் திகதி வரை இவர், நியூயார்க், பென்சில்வேனியா, அரிசோனா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக அமெரிக்க காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “உங்கள் பள்ளியில் சில வெடிகுண்டுகளை வைத்துள்ளேன், 

இன்னும் சில மணி நேரங்களில் அவை வெடிக்கும், நீங்கள் இறந்து உங்கள் குடும்பத்தினர் அழுவதைப் பார்த்து நான் சிரிப்பேன்” என்று நுனெஸ் சேண்டோஸ் அண்மையில் பள்ளி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனால் 20 பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், பின்னர் அந்த மிரட்டல் வதந்தி எனத் தெரியவந்தது. 

பள்ளிகள் மட்டும் இல்லாமல் மருத்துவமனை, தேவாலயம் ஆகிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக தொடர்ந்து புகார் எழுந்ததை அடுத்து, அமெரிக்க காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க பெரு காவல்துறையினர் நுனெஸ் சேண்டோஸை தலைநகர் லிமாவில் கைது செய்துள்ளனர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு