நாட்டின் பெரும்பாலான இடங்களில் 100MM மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (02.10) மழையுடனான வானிலையே நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஸ
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும், சில பிரதேசங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை , தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.