கொலை செய்யப்பட்ட 52 வயதான பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

#Sri Lanka #Murder #Investigation
Prathees
1 month ago
கொலை செய்யப்பட்ட 52 வயதான பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

 சியம்பலாபே - தெற்கு பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் தலை மற்றும் கை கால்கள் இல்லாத நிர்வாண பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவருடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த திருமணமான வர்த்தகர் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (29ஆம் திகதி) குறித்த பெண்ணின் சடலம் அவரது குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டது. 

 கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் மற்றும் பெண்ணின் சகோதரி அடையாளம் காட்டினர். 

 அங்கொட, வைத்தியசாலை வீதி பகுதியில் வசித்து வந்த தமவிட்ட குருகே பிரதீபா சில்வா என்ற 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 ஆனால்,சடலத்தின் தலை மற்றும் கைகால்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று பொலிசார் கூறுகின்றனர். 

 இந்த பெண்ணின் சடலம் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. 

 இதேவேளை, மஹர பதில் நீதவான் திரு.சமன் விதானபத்திரன கடந்த வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் வீடு மற்றும் சடலத்தை பார்வையிட்டு சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

 கடந்த 27ஆம் திகதி காலை கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற பெண் காணாமல் போயுள்ளதாக அவரது மகள் முல்லேரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 அதன்படிஇ முல்லேரிய பொலிஸார் குறித்த தினத்தில் சி.சி.டி.வி. கமெரா காட்சிகளை அவதானித்ததில் குறித்த பெண் அங்கொடையில் இருந்து கடுவலைக்கு முச்சக்கரவண்டியில் வந்துள்ளதும் அங்கிருந்து காரில் நபர் ஒருவருடன் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

 தற்போது சடலம் ராகம பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு