ஹபரத்வல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
11 months ago
ஹபரத்வல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரத்வல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விகாரகல, சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இறந்தவர் வேறொருவருடன் அதிகாம ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு ஏரிக்கரையை அண்மித்த காட்டுப்பகுதிக்கு பலிகடா தயாரிப்பதற்காக சென்ற போது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.