உலக குடியேற்ற தினம் இன்றாகும்!

#Sri Lanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
உலக குடியேற்ற தினம் இன்றாகும்!

உலக குடியேற்ற தினத்தை முன்னிட்டு இன்று (02.10) முதல் தீர்வு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

"பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருடம் உலக வாழ்விட தினம் கொண்டாடப்படவுள்ளதாகவும், பல வேலைத்திட்டங்களை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி தீர்வு வாரமாக அறிவிக்கப்பட்டு அந்த வாரத்தில் 500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா (உரிமம் ) வழங்கப்படவுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், மாவட்ட அளவில் வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தையும் அமுல்படுத்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.  

இந்த உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு பொறுப்பு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு