ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

#sports #2023 #Tamilnews #Player #Breakingnews #ImportantNews #Sports News #AsiaCup
Mani
2 years ago
ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தொடரின் 12-வது நாளான இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். அதிகபட்சமாக 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார்.

மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜேனா 2-ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் முறையே தங்கம், வெள்ளி வென்று அசத்தி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4