கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக முதலாவது பருககால உயிரிழப்பு!

#Canada #Lanka4 #லங்கா4 #Flu #Canada Tamil News #Tamil News
கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக முதலாவது பருககால உயிரிழப்பு!

கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக இந்த பருவ காலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

 2023-2024 ஆம் ஆண்டு கால பருவ காலத்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சளி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். அரசாங்க இணையதளத்தில் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவர் தொடர்பில் வேறு எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. எதிர்வரும் வாரம் முதல் அல்பர்ட்டா பிரஜைகள் பருவ கால சளி காய்ச்சல் மற்றும் கோவிட் 19 தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 தடுப்பூசி ஏற்றிக்கொள்ள விரும்புவோர் 811 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அல்லது உள்ளூர் சிகிச்சை நிலையங்களில் தடுப்பசி ஏற்றிக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4