ஜிகர்தண்டா-2 அப்டேட்! மாமதுர பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

#India #Cinema #Actor #TamilCinema #2023 #Tamilnews #Breakingnews #Movie
Mani
2 years ago
ஜிகர்தண்டா-2 அப்டேட்! மாமதுர பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் 9-ஆம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா-2 படத்தின் முதல் பாடலுக்கு நடனமாடும் நேரம் நெருங்கிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4