அஜித் படத்தில் இணைந்த ரெஜினா!

#India #Cinema #Actor #Actress #TamilCinema #2023 #Tamilnews #Movie
Mani
2 years ago
அஜித் படத்தில் இணைந்த ரெஜினா!

ரெஜினா கசாண்ட்ரா ஆரவாரமில்லாமல் தமிழ் சினிமாவுக்குள் ‘கண்ட நாள் முதல்’ படத்தில் அறிமுகமானவராக ரசிகர்களுக்கு தெரிந்தாலும், 9 வயதிலிருந்தே தொகுப்பாளினியாக கேமரா முன்பு மேக்கப் போட்டு நின்றிருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து பல குறும்படங்களில் நடித்த அனுபவங்களும் சேர்ந்து கொள்ள, தமிழ், தெலுங்கு, கன்னடம் என அத்தனை மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் ரெஜினாவை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தினாலும் அடுத்தடுத்து வந்த படங்கள் கவனம் ஈர்க்கவில்லை. அதனால் பாலிவுட்டில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்த ரெஜினாவுக்கு தெலுங்கு திரையுலகம் கம்பளம் விரித்தது.

ரெஜினாவின் தெலுங்கு மார்க்கெட் உச்சம் தொட்டதால் தமிழிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வரத் தொடங்கியது அவருக்கு. அந்தப் பயணத்தின் உச்சமாக இப்போது ‘விடாமுயற்சி’யில் அஜித்துடன் நடிக்கும் அதிர்ஷ்டமும் அவருக்கு வாய்த்திருக்கிறது.

“அதிர்ஷ்டசாலி பொண்ணு தான்” என்று ’விடாமுயற்சி’ வாய்ப்பு பற்றி கோலிவுட்டில் சிலாகிப்பவர்களிடம்... “அதிர்ஷ்டமில்லை... இதற்குப் பின்னால் அத்தனை உழைப்பும், போராட்டமும், காத்திருப்பும் இருக்கு” என்று அஜித் போலவே பக்குவமாக பதில் சொல்லி வருகிறாராம் ரெஜினா.

”இத்தனை அங்கீகாரம் கிடைப்பதற்கு எனது விடாமுயற்சிதான் காரணம் என்று சொல்வேன். இனி தொட்டதெல்லாம் ஹிட் தான். கதைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் இங்கே பெரும்பாலான ஹீரோயின்களுக்கு கிடைப்பதில்லை. ஆனாலும், என்னுடைய கதாபாத்திரத்தை கொஞ்சம் கவனமாக கவனித்து தேர்வுசெய்கிறேன்” என்று சொல்கிறார் ரெஜினா.

ஒரு நேர்காணலின் போது, நடிகைகள் பார்ட்டிகளில் கலந்து கொள்வது குறித்தான கேள்விக்கு பளிச் பதில் சொன்ன ரெஜினா, “நடிகைகள் பார்ட்டி, பப் என்று குடிப்பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காக அவர்கள், அனைவருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பதல்ல. அது அவரவர்களுடைய பெர்சனல். அவரவர் வாழ்க்கை அவர்கள் விருப்பம் போல. ஏன் இன்னொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் படையெடுக்கிறீர்கள்?” என்று சொல்லி அதிர வைத்தார்.

அஜித் ரசிகர்கள், ‘விடாமுயற்சி’யில் த்ரிஷா நடிக்க கமிட்டானதை விட ரெஜினாவின் பெயர் உச்சரிக்கப்பட்டதில் இருந்து கூடுதல் உற்சாகத்தில் இருக்கின்றனர். அஜித் போலவே ஃபிட்னெஸ், சாகசங்களை விரும்பும் ரெஜினா, தல போலவே தன் மனதில் பட்டதை அதிரடியாக பேசுபவர், தன்னுடைய வாழ்க்கையையும் தானே செதுக்கிக் கொண்டவர் என்று அஜித்துக்கும் ரெஜினாவுக்குமான ஒற்றுமைகளைப் பட்டியல்போட்டு வருகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4