கனடாவின் கியுபெக் நகரில் பாலம் உடைந்து விழுந்துள்ளது. சிலருக்கு காயம்
#Canada
#Lanka4
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

கியூபெக்கில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறு பாலமே இவ்வாற உடைந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்ததாகவும், 10 பேர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிய பாலம் இடிந்து வீழ்ந்த போதிலும் மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



