ஜவான் திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை

#India #Cinema #TamilCinema #Collection #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
ஜவான் திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ.1,117.39 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் ஒரு போஸ்டரைப் பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4