கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுக்காளான 97 வயது மூதாட்டி

#Canada #Sexual Abuse #Lanka4 #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுக்காளான 97 வயது மூதாட்டி

கனடாவில் 97 வயதான பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு ஒன்றாரியோ வதிவிட பாடசாலை ஒன்றில் பராமரிப்பாளராகவும் ஆசிரியராகவும் இந்தப் பெண் கடமையாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 வதிவிட பாடசாலை நடத்தப்பட்ட காலத்தில் இந்த இந்தப் பெண் சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த 97 வயதான மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 இந்த சம்பவங்கள் தொடர்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என போலீசார தெரிவிக்கின்றனர். முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை அடுத்து குறித்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

images/content-image/1697455637.jpg

 இந்த வதிவிட பாடசாலையில் பாலியல் துஷ்பியோகங்கள், மின்சார நாற்காலி சித்திரவதை உள்ளிட்ட மிக மோசமான கொடூரமான வன்முறை சம்பவங்களும் சித்திரவதைகளும் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 சம்பவத்துடன் தொடர்புடைய மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட மூதாட்டி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5-ம் திகதி குறித்த மூதாட்டி நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!