கனேடிய அமைச்சரொருவர் பதவி விலகி தனியார் துறையில் இணைந்தார்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைச்சர் ஒருவர் பதவியை துறந்து தனியார் துறை தொழிலுக்கு சென்றுள்ளர்.
முன்னாள் தொழில் அமைச்சர் மொன்டி மெக்னோட்டன் தனியார் துறையில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். மெக்னோட்டன் ஒரு மாதத்திற்கு முன்னதாக அமைச்சுப் பதவியை விட்டு விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வுட்பெய்ன் என்டர்டெய்ன்மன்ட்ஸ் என்னும் நிறுவனத்தின் துணை தலைவர் பதவிக்கு மெக்னோட்டன் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் முக்கிய நிறைவேற்றுப் பதவிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் இலக்குகளை எட்டுவதற்கு மெக்னோட்டனின் தலைமைத்துவம் அவசியமானது என வுட்பெய்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டில் சட்ட மன்ற உறுப்பினராக தெரிவான மெக்னோட்டன், முதல்வர் டக் ஃபோர்ட் அரசாங்கத்தில் தொழில் அமைச்சராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தககது.



