பிரான்ஸின் தென்கிழக்கு பகுதிகளில் கனத்த மழைபெய்யலாம் என எச்சரிக்கை
#France
#Rain
#Lanka4
#Warning
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Alpes-Maritimes உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பலத்த மழை பெய்யும் எனவும், அதிகபட்சமாக 200 மில்லிமீற்றர் மழை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Alpes-Maritimes மாவட்டத்துக்கு அதிகபட்சமாக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு உள்ள அனைத்து மழலையர் மற்றும் ஆரம்ப பாடசாலைகள் அனைத்தும் ஒன்று மூடப்பட்டுள்ளன. அதேவேளை, 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.