பணயக்கைதிகளை விடுவிக்க பிரான்ஸ் அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் - இமானுவல் மக்ரோன்

#France #Lanka4 #President #release #லங்கா4 #ஜனாதிபதி #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பணயக்கைதிகளை விடுவிக்க பிரான்ஸ் அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் - இமானுவல் மக்ரோன்

ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிரெஞ்சு மக்களையும் விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரான்ஸ் எடுக்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

 இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஒக்டோபர் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உரையாடினார்.

 வீடியோ அழைப்பினூடாக உரையாடிய ஜனாதிபதி, குடும்பத்தினர் அனைவரும் அவர்களது உறவினர்களை (பணயக்கைகளை) பிரான்சுக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதாக உறுதியளித்தார்.

images/content-image/1697816307.jpg

 சற்று முன்னர் எலிசே மாளிகை (ஜனாதிபதி மாளிகை) வெளியிட்ட அறிக்கையில் “அவர்கள் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்!” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ஹமாஸ் படையினரின் தாக்குதலில் இதுவரை 28 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டும், 7 பேர் காணாமல் போயும் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!